திருவாரூர், மே. 16 –
திருவாரூர் மாவட்டம் கொடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட விக்ரபாண்டியம் பஞ்சாயத்து செயலர் ஆர்.குமார் என்பவர் பிரதமந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கிழ் வீடு கட்ட விண்ணபித்த திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலூகா, விக்ரபாண்டியம் கிராமத்தைச்சேர்ந்த வீராச்சாமி என்பவரின் மகன் வீ. குமார் என்பவரிடம் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து முதல் தவணையை விடுவிப்பதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டததால், அப்பணத்தை கொடுக்க விருப்பம் இல்லாத வீ.குமார் என்பவர் திருவாரூர் பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் அவர் மீது புகாரளித்து மேலும் அந்த அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்புகாரில் தெரிவித்ததின் பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அப்புகாரின் மீது கடந்த மே 10 ஆம் தேதியன்று வழக்கு பதிவு செய்து, பொறி வைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
மேற்படி பொறிவைப்பு நடவடிக்கையின் போது விக்ரபாண்டியம் செயலர் ஆர் குமார் வீ.குமாரிடம் ரூ. 10 ஆயிரத்தை லஞ்சமாக கேட்டுப் பெறும் போது ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள் அவரை கைது செய்து மேற் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.





















