சென்னை, மே. 14 –
சென்னை திருவெற்றியூர் ரயில்வே நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபர்களை போலீசார் சோதனையிட்டதில் அவர்களிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களை பிடித்து விசாரித்ததில் திரிபூரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் வழியாக கஞ்சாவை கடத்தி வந்து சென்னையின் பல்வேறு பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்து வந்ததும், சென்னை துரைப்பாக்கம் பகுதியில் வாடகை வீடு ஓன்றில் பதுக்கி வைத்திருப்பது போலீசார்க்கு தகவல் கிடைத்துள்ளது.
அதை தொடர்ந்து ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் சீவரம் பகுதியில் வாடகை வீட்டில் கஞ்சா வைத்திருந்த 14.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் திரிபூரா மாநிலத்தை சேர்ந்த சந்தன்தாஸ் (31), சுமன் தேப்நாத்(23), அப்துபுல்காசிம் (44), சுதீப் தேப்நாத் (30), ரபீந்திரா தேப்நாத் (34), ஆகிய 5 நபர்களை கைது செய்தனர்.
துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததால் கைது செய்யப்பட்ட 5 பேரையும், 14.5 கிலோ கஞ்சாவையும் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் இவர்கள் அனைவரும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் பிற மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையின் பல்வேறு பகுதியில் விற்பணையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. கடந்த மூன்று மாதங்களாக துரைப்பாக்கம் சீவரம் பகுதியில் வாடகை வீடு எடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
பின்னர் கைதான 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
துரைப்பாக்கம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக கொடி கட்டி பறப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டும் நிலையில் துரைப்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் சரிவர ஈடுபடவில்லை என்றும் காவல் ஆய்வாளர் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
துரைப்பாக்கம் ஆய்வாளர் துரிதமாக செயல்பட்டு துரைப்பாக்கம் பகுதியில் களைகட்டும் கஞ்சா விற்பனையை முற்றிலும் அழித்து இளைஞர்களை பாதுகாக்க வலியுறுத்துகின்றனர்.



















