திருவீழிமிழலை, மே. 09 –
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேவுள்ள திருவீழிமிழலை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீ வீழிநாதசுவாமி கோவில் உள்ளது.
இத்திருவாலயத்தில் திருக்கல்யாண வைபவமாக யாத்திரா தானம் செய்து ஸ்ரீ மாப்பிள்ளைச்சாமி கைலாயத்திலிருந்து படி இறங்கி வந்து கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் செய்தார். அதன் பிறகு ஸ்ரீ காத்யாயினி அம்பிகை சமேத ஸ்ரீ மாப்பிள்ளை சாமிக்கும் கல்யாண மாலை மாற்றும் வைபவமும் திருக்கல்யாண வைபவமும், திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்.




















