மீஞ்சூர், மே. 07 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கல்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது வெள்ளம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்து மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் .ஜெயக்குமார் வருகை தந்தார். அவரிடம் சுடுகாட்டுக்கு பாதை வேண்டி ஊராட்சி மன்ற தலைவரின் சார்பாக கிராமத்து மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதனைப் பெற்றுக் கொண்ட அவர் இதுக் குறித்து தகுந்த அதிகாரிகளிடம் விசாரணை செய்து பாதை அமைத்துத் தர வழிவகை செய்வதாக உறுதியளித்தார். அவருடன் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா துரைராஜ் .திமுக செயலாளர் பாலகணபதி. ஊராட்சி செயலர் ஹரி கிருஷ்ணன் .மற்றும் கிராமத்தினர் பலர் உடனிருந்தனர்.