போரூர், மே. 06 –
நேற்று வணிகர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற வணிகர்களின் உடல் நலம் காக்கும் வகையில் போரூர் அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
போரூரை அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் வணிகர் தினத்தையொட்டி வணிகர்களின் உடல் நலம் காக்க சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று மே 5 வணிகர் தினம் என்பதால் அனைத்து கடைகளும் மற்றும் வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்த்து.
இதனால் வியாபாரிகள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்காகவும் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெறும் வகையில் பொது மருத்துவம் கண் மற்றும் காது மருத்துவர்கள் கொண்டு சிறப்பு மருத்துவ முகாம் கெருகம்பாக்கம் சுற்றுவட்டார வியாபாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முகாமை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கலந்துகொண்டு உடல் மற்றும் கண் காது ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.