மீஞ்சூர், மே. 01 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காணியம்பாக்கம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அடிப்பட்டு வி.ரவி கலந்துகொண்டு ஊராட்சி மன்றத்தின் தேவைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து மன்ற தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் கிராமத்திற்குள் சாலைகள் குடிநீர் மின் விளக்குகள் ஏரி .குளங்கள். பராமரிப்பு மற்றும் நீ போக்கு கால்வாய்களை தூர்வாருதல் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமத்தினருக்கு பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேப் போன்று கொண்டகரை ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சியில் மறுமலர்ச்சி அண்ணா திட்டத்தின் கீழ் பணிகள் செய்யவும் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் செய்திடவும் கோரிக்கைகள் நிறைவேற்றி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி செயலர் முருகன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.





















