மீஞ்சூர், மே. 01 –
தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றது. கோடை வெயிலின் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நடைப்பெற்ற கிராம சபைக் கூட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வன்னிப்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் தலைமையிலும்,
கல்பாக்கம் ஊராட்சியில் பிரியங்கா துரைராஜ் தலைமையிலும்.
மேலூர் ஊராட்சியில் வாசுகி நிலவழகன் தலைமையிலும்.
நெய்தவாயல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலன் தலைமையிலும்.
மேரட்டூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மேரிரகுபதி தலைமையிலும் .கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன
மேலும் முக்கிய பிரச்சனைகளாக கருத்தில் கொண்ட மீஞ்சூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அருகிலுள்ள கல்பாக்கம் ஊராட்சியில் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வன்னி பாக்கம் ஊராட்சியில் முதியோர் உதவித்தொகை விதவைகள் பென்சன் உள்ளிட்டவைகள் வரவில்லை எனவும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மெரட்டூர் பகுதியில் சமுதாயக்கூடம் கிராமங்களில் தரமானசாலைகள் வேண்டியும் திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . மேலூர் கிராமத்தில் கிராமத்திற்குள் சாலைகளும் குடிநீர் மின்விளக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கூட்டங்கள் நடைபெற்றன. இதில் எப்போதும் இல்லாத வகையில் இளைஞர்கள் திரளானோர் கலந்து கொண்ட கூட்டமாக இருந்தது.
மேலும் ஒரு சில ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்கள் வராததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது அந்தக் கூட்டங்களுக்கு மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன் நேரடியாகச் சென்று சமரசம் பேசி நடத்தி வைத்தார்.