புதுக்கோட்டை, ஏப். 17 –
நேற்று சென்னையில் ஓராண்டில் ஒருலட்சம் மின் இணைப்பு திட்டத்தின் வாயிலாக பயன் பெற்ற விவசாய பயனாளிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாய பயனாளிகள் மின் இணைப்பு பற்றிய தங்கள் கருத்துக்களை காணொளிக்காட்சி வாயிலாக முதலமைச்சரிடம் தெரிவித்தனர். அதுப்போன்று நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசம்பட்டி சண்முகநான் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படிருந்த காணொளிக்காட்சி வாயிலாக இத்திட்டத்தில் பயன் பெற்ற விவசாயிகள் முதலமைச்சரிடம் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய மாவட்ட நிருவாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துக் கொண்டார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் ( பொ ) அசோக்குமார், மின் வாரிய செயற்பொறியாளர் எம்.ஆனந்தாயி, ஒன்றியக்குழு உறுப்பினர் அழக் என்ற சிதம்பரம், ஆர்.எம்.கருப்பையா, மின் இணைப்பு பெற்ற விவசாய பயனாளிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.



















