ஆவடி, ஏப். 11 –

ஆவடி நந்தவன மேட்டூர் குடியிருப்பு பகுதியில் இன்று இரவு 8 முதல் 9 மணிக்குள்ளாக அங்குள்ள மின்சார கம்பத்தில் அதி பயங்கரமாக சத்தம் எழுப்பி, பற்றியெரிந்த பயங்கர தீயால் 500 க்கும் மேற்பட்ட குடிருப்புகளில் பல மணி நேரமாக மின்சாரம் இன்றி அப்பகுதி குடியிருப்புவாசிகள் தவித்து வருகின்றனர்.

இத் தீ விபத்துக்கான காரணம் என்ன ? தரமற்ற மின் வயர்கள் பொருத்தபட்டதால், உயரழுத்த மின்னழுத்த மின்சாரம் தாங்காமல் இவ்விபத்து ஏற்பட்டதா ? மின் கம்பிகள் உரசலில் ஏற்பட்ட தீ விபத்தா ! மின்சார ஊழியர்களின் மாதந்திர பராமரிப்பின் குறைபாடுகளா என்பது போன்ற கேள்விகளோடு வீடுகளில் மின்சாரம் இல்லாததால், வீதிகளில் நின்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணமாக,  பல்வேறு கருத்துக்களை தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர் அப்பகுதி மக்கள்.

சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட நந்தவனம் மேட்டூர் பகுதியிலுள்ள திருவள்ளுவர் தெரு, கம்பர் தெரு, கென்னடி தெரூ, காந்தி தெரு, கட்டபொம்மன் தெரு, உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட வீடுகளில்  சுமார் 3 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி தெருக்களில் தஞ்சம் ஆகிவுள்ளனர்.

இந்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு, அப்பகுதி பொதுமக்கள் டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் மின்சார இணைப்பை துண்டித்து பயங்கரமாக தீப்பற்றி எரிந்த மின் கம்பத்தின் தீயை அணைத்தனர். ஆகையால் உயிர் சேதம் இல்லாமலும், மேலும், வீடுகளில் உள்ள மின்சார மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் பாதிப்புக்கள் தற்போது வரை எதுவும் ஏற்படவில்லை என தெரிய வருகிறது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மின்வாரிய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மேலும், மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இவ்விபத்துக் குறித்த விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதி மக்களே தீப்பற்றி மின்சார கேபிள்களில் எரிந்து வந்த தீயினை அணைத்தனர்.

36-வது வார்டில் அமைந்துள்ள இப்பகுதியில்,  தற்போது ஆவடி மின்சார வாரிய ஊழியர்கள் இரவோடு இரவாக பாதிப்புகளை சரி செய்யும் பணியில் முழுமையாக ஈடுபட்டு எரிந்த கேபிள்களை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here