கும்பகோணம், மார்ச். 29 –
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே, காவிரியாற்றின் குறுக்கே, புதிதாக ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் நீரொழுங்கியுடன் கூடிய பாலம் கட்டுமான பணிக்கு, பூமி பூஜை போட்ட பிறகு, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் கலந்து கொண்டு கொடியசைத்து வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நீரொழுங்கியுடன் கூடிய பாலம் அமைத்த பின், தேப்பெருமாநல்லூர், திருபுவனம் அசூர் பெரும்பாண்டி மற்றும் உள்ளுர் ஆகிய 3 வாய்க்கால் மூலம் சுமார் 4,200 ஏக்கர் நிலங்கள் எளிதாக பாசன வசதி பெறும், நகரில் உள்ள ரெட்டிராயர் குளம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட குளங்கள் எளிதாக நீர் நிரம்பிட வசதி ஏற்படும்.
கும்பகோணம் பழைய பாலக்கரை பாலத்தில் பெரும்பாலான நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திடவும், நகரில் உள்ள குளங்கள் எளிதாக நிரம்பிட வசதி ஏற்படுத்திடவும், காவிரியாற்றில் இருந்து பிரியும் 5 வாய்க்காலின் மூலம் எளிதாக 4,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வசதி ஏற்படும், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே, காவிரியாற்றின் குறிக்கே, நீரொலிங்கியுடன் கூடிய புதிய பாலம் கட்ட கடந்த 2016ம் ஆண்டு ரூபாய் 9 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அது ஏட்டளவிலேயே இருந்தது.
தற்போது இதனை மறுமதிப்பீடு செய்து ரூபாய் 15 கோடியே 67 லட்சத்தி 15 ஆயிரத்தில், 200 அடி நீளத்திற்கு 15 அகலத்தில், 15 கதவணைகளுடன் ஒவ்வொரு கதவணையும் 10 அடி அகலம், 7 அடி உயரத்தில் புதிய பாலம் அமைப்பதற்காக இன்று பூஜைகள் போட்ட பின்னர், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே சரவணன், துணை மேயர் சு ப தமிழழகன், மாமன்ற உறுப்பினர்கள், பொதப்பணித்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர் இப்பாலம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது, பாலக்கரை புதிய பால போக்குவரத்து நெரிசல் ஓரளவிற்கு குறையும், அதுபோல காவிரியில் இருந்து பிரியும் 5 வாய்க்கால்கள் மூலம் எளிதாக காவிரிநீர் பாய்ந்து 4,200 ஏக்கர் சாகுபடி நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடதக்கது






















