காஞ்சிபுரம், மார்ச். 28 –

மார்ச் 28, 29 பாரத் பந்த்: காஞ்சிபுரத்த்தில் பெருபாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை பேருந்து கிடைக்காத காரணத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வேலைக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் தவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சியினர் காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடியில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் பங்கேற்று துவக்கி வைத்தார்.

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் 28, 29-ம் தேதிகளில் (இன்று மற்றும் நாளை) அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் ஐஎன்டியுசி, சிஐடியு,ஏஐடியுசி, ஏஐசிசிடியு, எச்எம்எஸ் உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த சங்கங்கள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்கின்றன. இந்தியா முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா நிறுவன பணியாளர்கள் என சுமார் 25 கோடி பேர் பங்கேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள், அரசு ஊழியர்கள் என ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்பதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கக் கூடும் என்பதால் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளன.

தமிழக அரசு ஊழியர்கள் அந்த 2 நாட்கள் பணிக்கு வராவிட்டால் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து பேருந்து பணிமனைகள், முக்கிய பேருந்து நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்த வரை அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டுள்ளது தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றது. இதனால் சரியான நேரத்திற்க்கு வேலைக்கு செல்ல முடியாமல் காஞ்சிபுரம் பேருந்து நிலைத்தில் ஏராளமானோர் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடியில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here