கும்பகோணம், மார்ச். 24 –
கும்பகோணம் அருகே உள்ள ஆரலூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சுமதி இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் என்பவருடன் திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட பாதுகாப்பு கருதி இறந்து போன தனது கணவரின் தம்பி விஜயகுமாரை மறு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 11 வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில் சுமதியின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் வழக்கறிஞர் லோகநாதன், அவரது சகோதரர்கள் தாமோதரன், மதியழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து அவரது சொத்தை அபகரித்து, தன்னை அடித்து துன்புறுத்துவதாக பந்தநல்லூர் காவல் நிலையத்தில் இவர்கள் மீது புகார் மனு அளித்துள்ளார்.
காவல் நிலையத்தில் அதன் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளதாகவும், மேலும் இப்பிரச்சினை குறித்து தனது உறுவினர்கள் மற்றும் கிராம மக்கள் நியாயம் கேட்டால் அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து விடுதாக மிரட்டுவதாகவும், மேலும், லோகநாதனின் தம்பி தாமோதரன் தன்னிடம் முதல் கணவர் சக்திவேல் காலமானதில் இருந்தே தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாகவும், அதற்கு நான் உடன் படாததால், தன்னையும் தனது குடும்பத்தினரையும் தொடர்ந்து பல்வேறு வகைகளில் தொந்தரவு செய்து வருவதாகவும், தனது மகளையும் தன்னையும் அங்கு தொடர்ந்து வசிக்க முடியாதபடி துன்புறுத்தி வருவதாகவும் தாங்கள் கிரயம் மூலம் பெற்ற சொத்தையும் அபகரித்து வைத்து கொண்டு மிரட்டுவதாகவும், தங்களை வீடு புகுந்து அடித்து உதைப்பதாகவும் அவர்கள் அனைவரின் மீதும் குற்றம்சாட்டி, கும்பகோணம் கோட்டாட்சியரை சுமதி தனது மகள் மற்றும் தாய் வீட்டு உறவினர்களுடன் நேரில் சந்தித்து முறையிட்டு கோரிக்கை மனு கொடுத்தார்
பேட்டி : ஆரலூர் சுமதி (பாதிக்கப்பட்ட இளம்பெண்)



















