பொன்னேரி, மார்ச். 23 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி.சங்கர்ராஜா தலைமை வகித்தார். மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி மாவட்ட செயலாளர் ரவி. சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் முனிரத்தினம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் .
இதில் 25க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திமுகவில் இருந்து விலகி மனசாட்சி மாற்றுத்திறனாளி சங்கத்தின் நிறுவனர் கே. குமாரின் ஒருங்கிணைப்பில் விஜி. ஆதிலட்சுமி. சசிகலா. அப்துல். ராகேஷ். கல்யாணி .பழனி .அருள் ஜோம்பிரிட்டோ .உள்ளிட்ட சுமார் 25-க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பி.வி.சங்கர் ராஜா முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். நிகழ்வில் திரளான அமமுக கட்சி தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அமமுக வில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்ட மாற்றத்திறனாளிகள் அனைவருக்கும் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வழங்கி அமமுக வினர் தங்கள் வாழ்த்துக்களை பரமாறிக் கொண்டனர்.