சென்னை, மார்ச். 22 –

கல்லூரி மாணவர்களின் அறிவியல் மற்றும் கலைத்திறன்களை வளர்க்கும் விதமாக ஓபன் ஹவுஸ் அறிவியல் கண்காட்சி மூன்று தினங்களாக படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றது.

சென்னையை அடுத்த படூரில் உள்ள தனியார் (இந்துஸ்தான்) பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளின் திறன்களை வளர்க்கும் வகையில் அறிவியல் மற்றும் கலை திறன் கண்காட்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

(Open House) ஓபன் அவுஸ் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மூன்றுநாள் அறிவியல் கண்காட்சியில் அறிவியல் பயிலும் மாணவர்கள் ரோபோ, தொழில்நுட்பத்துடன் இயங்ககூடிய கார், கால்பந்து விளையாடும் ரோபோ, கார் ரேஸ் பந்தயத்தில் ஈடுபடும் ரோபோ என பலர் தங்கள் அறிவியல் திறன்களை காட்சிபடுத்தினர்.

மேலும், கட்டிட கலை மாணவர்கள் மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்பு, ஐடி நிறுவனங்கள், மாலை பிரதேசங்களில் சொகுசு வீடுகள் என தங்களது கலை திறன்களை காட்சிபடுத்தியுள்ளனர்.

அதைப்போன்று, ஆடை வடிவமைப்பு மாணவர்கள் காபி கப்பை வண்ணம் தீட்டி ஆடை, பேப்பரால் செய்யப்பட்ட ஆடை, பட்டு உள்ளிட்ட ஆண் பெண்களுக்கான ஆடையை வடிவமைத்து காட்சிபடுத்தியுள்ளனர்.

இந்த மூன்றுநாள் கண்காட்சியை தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுகளித்து படைப்புகள் குறித்து கேட்டறிய கல்லூரி மாணவர்கள் விளக்கமளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here