பொன்னேரி, மார்ச். 13 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்கவிழா ஆலோசனைக்கூட்டம் பி.வி.சங்கர்ராஜா தலைமையில் நடைப்பெற்றது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகதின் தலைவர் டி.டி.வி.தினகரன் உத்தரவின் பேரில் கழகப் பொருளாளர் செநதமிழன் பரிந்துரையின் பேரில் கட்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் அக்கட்சியின் தொண்டர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் அனுப்பம்பட்டு பிவிசங்கர்ராஜா தலைமையில் பொன்னேரி அமமுக தலைமை அலுவலகத்தில் ஐந்தாம் துவக்க விழாவை முன்னிட்டு அக்கட்டசித் தோழர்கள் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் நிர்வாகிகளிடம் மீஞ்சூர். பொன்னேரி .கும்மிடிப்பூண்டி. உள்ளிட்ட பகுதிகளில் கட்சியை பலப்படுத்த வேண்டுவது குறித்தும், புதிய நிர்வாகிகளை சேர்ப்பதற்கு உண்டான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. வருகின்ற 15ஆம் தேதி தலைமை கழகத்திற்கு ஆயிரம் பேருக்கு மேல் செல்வதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் .மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சூர்யா .கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு .கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் முனிரத்தினம். கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ். ஆரணி நகர செயலாளர் தன்ராஜ் .மாவட்ட சுற்றுச்சூழல் செயலாளர் வச்சலா உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.





















