கும்பகோணம், மார்ச். 08 –

கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக  திமுக மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்கள்.

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உலக அளவில் பெண்களின் மகத்தான சாதனைகளைப் போற்றும் வகையில் சர்வதேச மகளிர் தினமாகவும் பெண்களுக்கான அரசியல், சமூக, பொருளாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

சொற்களால் பெண்களை போற்றி செயல்களால் அடிமைப்படுத்திய பழமைவாத காலம் வேகமாக மாறுகிறது. மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் இன்று உலக மகளிர் தினத்தையொட்டி திமுக மகளிரணி தொண்டரணி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக முக்கிய வீதி வழியாகச் சென்று மகாமக குளம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கவிதா மோகன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சுபா திருநாவுக்கரசு தொண்டரணி அமைப்பாளர் தமிழ்செல்வி துணை அமைப்பாளர் சுமதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மாநகராட்சி செயலாளர் தமிழழகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மகளிரணி தொண்டரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here