திருவண்ணாமலை மார்.6-

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவாகும் செல்போன் திருடு தொடர்பான வழக்குகளை அனைத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சைபர் கிரைம்  போலீசார் காணாமல் போன செல்போன் பதிவு எண் மற்றும் தற்போது அந்த செல்போன் எண்ணில் பொருத்தி பயன்படுத்தி வரும் சிம்கார்டு எண்களை வைத்து விசாரணை நடத்தி செல்போன்களை மீட்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த 2 மாதங்களில் பதிவான செல்போன் திருட்டு வழக்கில் 100 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளனர். இந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி நேற்று ஒப்படைத்தார். அப்போது சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பாரதி உள்பட பலர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here