கவரப்பேட்டை, பிப். 28 –

   திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கும்மிடிபூண்டி கவரப்பேட்டை, தீனதயாளன் நகர் மறைந்த கஜனாதன் என்பவரின் மனைவி சிவரஞ்சனி வயது 42 அவருக்கு ஒருமகன் மற்றும் மோனிகா என்ற மகள் வயது 19 உள்ளனர். அவர்களோடு அப்பகுதியில் வசித்து வருகிறார்.

   சிவரஞ்சனியின் கணவர் கஜநாதன் கடந்த 2016 ஆம் ஆண்டு கேஷ்லீக் ஏற்பட்டு அவ்விபத்தில் மறைந்துவிட்டார். இந்நிலையில் வருமானத்திற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார். அந்நிலையில் தனது மகள் மோனிகாவை அரக்கோணத்தில் உள்ள ஜெயா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை படிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் மோனிகாவிற்கு தட்டம்மை நோய் காரணமாக மகளை சிகிச்சைக்காக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

   இந்நிலையில் சம்பவம் நாளான கடந்த பிப் 23 ஆம் தேதி காலை வழக்கம் போல் மோனிகாவின் தாயார் சிவரஞ்சனி சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுள்ளார். தன் மகன் அருகே உள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படிப்பதால் அவன் பள்ளிக்கு சென்று விட்டார். இந்நிலையில் தனியாக இருந்த தனது மகள் திடீரென காணாமல் போய்விட்டார் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தனது மகன் அக்கா காணாமல் போனதுக் குறித்து தாயருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தாய் சிவரஞ்சனி அக்கம் பக்கம் மற்றும் தெரிந்தவர்வகள் அறிந்தவர்கள் என பல தரப்பினரிடம் கேட்டும் சென்றும் பார்த்ததில் அவரைப்பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை மேலும் கடந்த பிப் 25 ஆம் தேதியன்று ஒரு தொலைப்பேசியில் இருந்து மோனிகா அவரது தாயரிடம் பேசியுள்ளார். அப்போது தான் கரூரில் இருப்பதாகவும் தான் வீடு வந்து விடுவதாகவும் கூறியுளார். ஆனால் இந்நாள் வரை மோனிகா வீடு திரும்பவில்லை இது குறித்து மணவாளன் நகர் காவல்நிலையத்தில் மோனிகாவின் தாயார் சிவரஞ்சனி கொடுத்த புகாரில் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் மணவாளன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி மோனிகாவை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here