சென்னை, பிப். 25 –

தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிக் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 அவ்வறிவிப்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கொப்பம்பட்டியைச் சேர்ந்த குருசாமி ஈராச்சி என்பவரின் மகன் ராமர் மற்றும் பொய்யாமொழி என்பவரின் மகன் தங்கவேல் தொட்டம்பட்டி, பசுவந்தனையைச் சேர்ந்த குட்டையன் என்பவரின் மகன் ஜெயராஜ்; நாலாட்டின் புதூரைச் சேர்ந்த வெள்ளச்சாமி என்பவரின் மகன் மாடமுத்து என்கிற கண்ணன் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்த துயரச் செய்தியினைக் தான் மிகவும் வேதனையடைந்தேன் எனவும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் வெளியிட்டுள்ளார்.

     மேலும், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here