திருவண்ணாமலை பிப்.16-
நந்தன் கால்வாய் திட்டத்தை விரிவுபடுத்த கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 15 வேட்பாளர்களுக்கு உதயசூரியன், கை, தென்னைமரம் ஆகிய சின்னங்களுக்கு வாக்களியுங்கள் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இவர்களை ஆதரித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் மற்றும் வேட்டவலம் ஆகிய பேரூராட்சிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன், கை, தென்னைமரம் ஆகிய சின்னங்களுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின முதன்மையான சாதனை முதல்வராக திகழ்கிறார். ஆளுங்கட்சி திமுக அமைச்சர் திமுக இந்த தொகுதி எம்எல்ஏவும் துணை சபாநாயரும் திமுக எனவே திமுகவை சேர்ந்த கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுத்தால்தான் அரசின் திட்டங்கள் தங்குதடையின்றி இங்கு கிடைக்கும். ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் 15 வேட்பாளர்களும் வெற்றிபெற செய்யவேண்டும். தமிழகத்தில் தற்போது மக்களாட்சி நடந்து கொண்டிருக்கிறது. எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 8 மாத கால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் 75 சதவிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை வட்டார மருத்துவமனையாக மாற்றப்படும். இங்கு நீதிமன்றம், கருவூலம், அரசு பேருந்து போக்குவரத்து பணிமனை கால்நடை மருத்துவமனை போன்ற திட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன. மேலும் நெடுஞ்சாலை துறைக்கென ஒரு தனி அலுவலகம் திறக்க ஆணை பிறப்பிக்க உள்ளேன்.
நந்தன்கால்வாய் திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆட்சியில் இருப்பவர்களால்தான் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்கு என்னென்ன திட்டங்கள் என்று செய்ய முடியும். பேரூராட்சி திமுக கைப்பற்றினால்தான் திட்டங்கள் நிறைவேற்றப்படும். எனவே ஒவ்வொரு வார்டிலும் திட்டங்கள் கொண்டுவர திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு வாக்காளர்களாகிய நீங்கள் வாக்களியுங்கள் இந்த தேர்தல் என்பது நமக்காக வந்துள்ள தேர்தல். வார்டுகளுக்கான தேர்தல் எனவே அனைத்து பணிகளும் நிறைவேற்றவும் அரசு மூலம் கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் பேரூராட்சிகளில்
திட்டங்கள் செயல்படுத்த நிதிஒதுக்கீடு செய்ய செய்ய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளுடனான எங்கு பார்த்தாலும் உதயசூரியனையே காணமுடிகிறது. எனவே அனைத்து பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றும். இவ்வாறு அவர் பேசினார்.
கீழ்பென்னாத்தூர் மற்றும் வேட்டவலம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற தேர்தல் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கு.கருணாநிதி, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர்கள் பூ.அய்யாகண்ணு, தமயந்தி ஏழுமலை, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.பி.அண்ணாமலை கோ.கண்ணன் ஒன்றியக்குழு உறுப்பினர் அனுராதாசுகுமார், வேட்டவலம் பேரூராட்சி நகர செயலாளர் பி.முருகையன், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி நகர செயலாளர் சி.கே.அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் சி.கே.பன்னீர்செல்வம், ஒன்றிய கழக துணை செயலாளர் சிவக்குமார் உள்பட 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





















