பெரியபாளையம், பிப். 4 –
திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கம் பெத்தநாய்க்கன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி என்பவரின் மகன் சுப்பிரமணி வயது 40 இவருக்கு தீபிகா வயது 20 என்ற மகள் உள்ளார்.
கும்மிடிப்பூண்டி பி.ஏ. ஃபுட்வேர் என்ற தனியார் நிறுவனத்தில் தீபிகா வேலை செய்து வருவதாக தெரிய வருகிறது. இந்நிலையில் சுப்பிரமணியின் மாமனார் நடராஜன் என்பவரின் வீடு பெரியபாளையம் மேட்டுத்தெருவில் உள்ளதாகவும் தீபிகா தினசரி அங்கிருந்தே வேலைக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.
வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய தீபிகா சம்பவ தினமான பிப் 2 ஆம் தேதி அன்று சுப்பிரமணியத்தின் மாமனாரும் தீபிகாவின் தாத்தாவுமான நடராஜனிடம் பெரியப்பாளையத்தில் உள்ள பஜாருக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற இளம் பெண் தீபிகா வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், இது குறித்து கிளாம்பாக்கத்தில் உள்ள தீபிகாவின் தந்தைக்கு நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
மகளை சுப்பிரமணி பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் விசாரித்துள்ளார் மகள் காணாமல் போனது குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத தால் உடனடியாக பெரியபாளையம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து பெரியபாளையம் போலீசார் காணாமல் போன இளம் பெண் தீபிகாவை தேடி வருகின்றனர்.



















