காஞ்சிபுரம், ஜன. 28 –
தமிழகத்தில் இன்று முதல் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் நடைப்பெறுகிறது.
அதனைப் போன்று காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டிலும் வேட்பு மனு பெறப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு வழங்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதனைப் போன்று காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்பு மனு வழங்க வரும் வேட்பாளர் வருகையை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சியில் தேர்தல் பணிகள் படும் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி அலுவலகப் பகுதியில் போக்குவரத்து மற்றும் தேவையின்றி பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் அருகே தடுப்புகளை அமைத்து வாகனங்களை மாற்று பாதியில் திருப்பி அனுப்பி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பணியில் காவல்துறை காவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சியில் இருந்து தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இம்மாநகராட்சி மேயர் பதவிக்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அம்முதல் பெண் மேயர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் அமலில் உள்ளதால் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டும் அனுமதிக்கபடுவார்கள் குறிப்பாக கொரோனா நெகடிங் சான்று மற்றும் முககவசம் சமூக இடைவெளியை கடைபிடித்து இருந்தால் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள்.




















