செங்கல்பட்டு, ஜன. 22 –
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, மகாலட்சுமி நகர், கங்கை தெருவில் அமைந்துள்ள செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தை காணொலி காட்சி மூலமாக துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் செங்கல்பட்டு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அ.இம்மானுவேல் ஞானசேகர், காவல் ஆய்வாளர் தமிழரசி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வம், காவல் ஆய்வாளர்கள் அண்ணாதுரை, திருமதி.கீதா மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் லஞ்சம்/ ஊழல் சம்மந்தமான புகார்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.
தொலைபேசி எண்கள் 044 – 27426055 , 94440 72827




















