சென்னை, ஜன. 22 –

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே ஆன்லைன் ஸ்சுவிகி டெலிவரியில் வேலை செய்வது போல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கானத்தூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்சுவிகி நிறுவனத்தில் பணிபுரிவது போல் உடை அணிந்து கஞ்சா விற்பனையில் இடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துசென்று விசாரணை மேற்கொண்ட போது அவர் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த 30-வயதான பிரகாஷ்குமார் சேனாபதி என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

     கஞ்சா விற்பதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here