கும்பகோணம், ஜன. 9 –
கும்பகோணம் அருகே பழவத்தாங்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமான சாய்ராம் பூங்காவில் இருந்து 15 தேக்கு மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தல் செய்துள்ளது. அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே பழவத்தாங்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமான சாய்ராம் பூங்காவில் 39 தேக்கு மரங்கள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப் பூங்காவில் இருந்த 15 தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி உள்ளனர் .
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்குமரங்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பழவத்தாங்கட்டளை ஊராட்சி மன்றத் அலுவலகத்திலும், ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளனர் .
இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






















