காஞ்சிபுரம், டிச. 30
காஞ்சி குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு 2 கோடி மதிப்பிலான இடத்தை அமைச்சர் முன்னிலையில் தானமாக வழங்கிய முதியவரின் செயலைப் பாராட்டி, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கௌரவித்து மரியாதை செய்தார்.
காஞ்சிபுரம் எம்.எம்.அவின்யூ பகுதியை சேர்ந்தவர் 85 வயதான ஒய்வு பெற்ற நகராட்சி அதிகாரி வேலாயுதம் தனது மனைவியுடன் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றார். இன்று காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்து ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு வருகை தந்த போது அமைச்சர் சேகர்பாபுவிடம் வேலாயுதம் தனது 2680 சதுர அடி நிலத்தில் உள்ள 2 மாடி கட்டிடம் உள்ளிட்ட இடத்தை அதன் இன்றைய சந்தை மதிப்பு 2 கோடி ரூபாய் என தெரிய வருகிறது. அவ்விடத்தை காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் பெயரில் ஏற்கனவே எழுதி வைத்திருந்த தானசெட்டில் மெண்ட் பத்திரத்தை அமைச்சரிடம் வழக்கினார்.
பத்திரத்தை பெற்றுக் கொண்ட அமைச்சர் சேகர்பாபு கோவில் நிர்வாகியிடம் அதனை வழங்கி முதியவர் வேலாயுதிற்க்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார் வேலாயுதத்திற்க்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர் . வேலாயுதத்தின் மகன் மற்றும் மகள் மூன்று பேரும் கிருஸ்துவ மதத்திற்க்கு மாறியதால் தனது சொத்தை தனது குல தெய்வமான முருகன் பெயருக்கு எழுதி வைத்ததாக வேலாயுதம் தெரிவித்தார்.



















