சென்னை, டிச. 29 –
இன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு எண் 133 க்கு உட்பட்ட அசோக்நகர் 19 வது தெருவில் கோவிட்-19 தொற்று பாதிப்பினால் தனிமைப்படுத்தப் பட்டவர்களின் வீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் ( சுகாதாரம் ) மருத்துவர் எஸ்.மனிஷ், உட்பட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.