காஞ்சிபுரம், டிச. 28 –
தமிழகத்தில் சிலம்பம் பயிற்சி முடித்த சிலம்பாட்ட வீரர்களுக்கு தமிழக அரசு பணிகளில் மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு என கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
இந்த நிலையில் முதல்வர்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் சிலம்பம் பயிற்சி பெறும் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே துவங்கிய இப்பேரணி காமராஜர்நகர், மூங்கில் மண்டபம், மேட்டு தெரு வழியாக ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
மேலும் தமிழகத்தில் நடைபெறும் குழந்தைகள் பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தியும், ஒமக்ரைன் வைரசிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க அனைவரும் தடுப்பூசி பேட்டுக்கொள்ள வேண்டும், முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மரம் வளர்க்க வேண்டும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் குரல் முழக்கம் எழுப்பியவாறும், கையில் அவ்வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியப் படியும் சிலம்ப பயிற்சி மாணவர்கள் கலந்துக் கொண்ட பேரணி நடைபெற்றது.






















