கும்பகோணம், டிச. 27 –
கும்பகோணம் அருகே திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் செங்குந்தர் மகாஜன கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் செங்குந்தர் மகாஜன கல்வி அறக்கட்டளை சார்பில் 24 ஆம் ஆண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மகாசபைக் கூட்டம் ராணி மகாலில் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் பொருளாளர் கந்தசாமி செங்குந்தர் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அதிக மதிப்பெண் பெற்ற 56 மாணவ மாணவிகளுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் தலைவர் ரங்கசாமி செங்குந்தர் நிர்வாக ஆலோசகர் மகாலிங்கம் செங்குந்தர் சிவலிங்க செங்குந்தர் தி.கோ சில்க்ஸ் தலைவர் தியாகராஜன் செங்குந்தர் இயக்குனர் சேகர் செங்குந்தர் கேபிள் நட்ராஜன் செங்குந்தர் செங்குந்தர் கல்வி சங்கம் மாவட்ட தலைவர் பொருளாளர் சந்திரசேகரர் சோழன் பட்டு கூட்டுறவு சங்கம் துணைத் தலைவர் வைரவேல் அம்மாசத்திரம் கல்வி சங்க செயலாளர் சந்திரகாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கினார்கள்.



















