சென்னை, டிச. 24 –
செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய இலவச பரிசோதனை முகாம் திறப்பு விழா இன்று நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் இம்மையத்தைத் திறந்து வைத்தார். இம் மையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட தனியறையில் இலவச இருதய பரிசோதனை மையமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மையம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தினங்களில் பயனாளிகளுக்கு அதன் இலவச இருதய பரிசோதனை யைசெயல்படுத்தும் எனவும் இதன் மூலம் எண்ணற்ற ஏழை எளிய பயனாளிகள் பயன் பெறுவார்கள் .
புதிதாக திறந்து வைத்த மையத்தில் பயனாளி ஒருவர் இருதய பரிசோதனை செய்து கொள்வதை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் பார்வையிட்டு பரிசோதனை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடி முதல்வராக நம் முதல்வர் திகழ்கிறார். மேலும், மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் வகையில் பல நல்ல பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக மருத்துவ துறையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல சாதனைகளை செய்து வரும் தமிழகத்தை முன்னெடுத்து நடத்தி வரும் தமிழக முதல்வர்க்கு தொகுதி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார்.
மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 24 மணி நேரமும் தன்னை அர்பணித்துக்கொண்டு பணியாற்றியதால்தான் தமிழகத்தில் பல மக்கள் உயிர்கள் காப்பாற்றப்பட்டன என புகழாரம் சூடினார்.
இந்நிகழ்ச்சியில் மேடவாக்கம் அரசு மருத்துவர் பிரபாவதி, தனியார் மருத்துவமனை சிஇஓ அலோக் குல்லர், திமுக ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரதிராஜன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மேடவாக்கம் ப.ரவி, கல்பனா சுரேஷ், மேடவாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சிவபுஷாணரவி, தென்சென்னை மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் போஸ், உள்ளிட்ட ஏராமானோர் உடனிருந்தனர்.