கும்பகோணம், டிச. 23 –
கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் வாழ்ந்து மறைந்த நாராயணசாமி சித்தரின் நினைவாக இன்று சாலையோர விருந்து. இன்று சுமார் 5000 நபர்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் நாராயண சித்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் வாகன வசதி இல்லாத அந்த காலத்தில் சீனிவாசநல்லூர் வழியாக வெளியூர் நடந்து செல்லும் நபர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார்.
இவரது அவதார தினம் தெரியாத நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி இவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி சீனிவாசநல்லூர் வழியாக செல்லும் அனைத்து நபர்களுக்கும் காலை மதியம் மாலை என தொடர்ந்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைஉணவு வழங்கப்படுகிறது.
இதனைப் போலவே இன்று காலையிலிருந்து சீனிவாசநல்லூர் நாராயணசாமி சித்தர் நினைவு நூற்றாண்டு நினைவு வளைவு இடத்திலிருந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் இந்த விருந்தில் பங்கேற்று வருகின்றனர்.





















