திருநின்றவூர், டிச. 21 –
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் :
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூரில் அங்கன்வாடி பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மூன்று வயதுக்கும் குறைந்த ஏழை எளியோர் வீட்டு குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இச்சூழலில் இந்த அங்கன் வாடி பள்ளி கட்டடம் சுமார் முப்பது ஆண்டு பழமையானது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதனை சரிவர பராமரிப்பு செய்யப்படாமல் அக்கட்டடச்சுவர் பூச்சுக்கள் இடிந்து விழுந்து வருவதாகவும், அதனால் அக்கட்டடம் அதன் திடத்தன்மையை இழந்து வருவதாக பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். மேலும், அபாய நிலையில் உள்ள இக்கட்டடத்தை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த அங்கன்வாடி பள்ளி தினமும் காலை 10 மணி முதல் 2 மணி வரை செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டல மழைபொழிவுக் காரணத்தினாலும் இக்கட்ட டத்தில் நீர்பிடிப்புகள் ஏற்பட்டு, சுவர்களில் நீர் கசிவுகளும் ஏற்படுகிறது. இதனால் அங்கு கல்வி பயின்று வரும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் ஆளாகி அடிக்கடி அவதிப்பட்டு வருகின்றனர். எனவும் சமுக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர், மாவட்ட, கல்வித்துறை மற்றும் தமிழக அரசு உள்ளிட்ட உயர் அரசு அலுவலர்கள் இப்பிரச்சினைக் குறித்து ஆய்வு நடத்தியும் பரவலாக நடந்து வரும் பள்ளிக் கட்டட விபத்துக்களை கருத்தில் கொண்டும் உடனடித் தீர்வுக் காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



















