செங்கல்பட்டு, டிச. 21 –

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூரில் இயங்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் அவர்களின் இன்னல்கள் குறித்து ஆய்வு நடத்தச் சென்ற சட்டப் பாதுகாப்பு மாவட்டப் பொறுப்பாளர்களை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்துப் கண்டனப் போராட்டமும், அவர்களை விடுவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கும் போராட்டமும் சட்டபாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடைப்பெற்றது.

இதுகுறித்து சட்டப்பாதுகாப்பு சங்கம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கடந்த 18.12.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை விடுதியில் பணிபுரியும் பெண்களுக்கு நடைபெறும் இன்னல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் சென்ற செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அவர்கள் மீது சட்ட முரணாக பொய் வழக்கு மூலம் கைது செய்யப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அன்சாரிசெந்தில் மற்றும் இலத்தூர் ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம்  அவர்களை விடுவிக்க கோரியும், வழக்கினை திரும்ப பெறக்கோரியும் நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மேற்கண்ட மாவட்டச் செயலாளரை விடுவிக்கக் கோரியும், பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் வலியுறுத்தப்பட்டது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here