கும்பகோணம், டிச. 19 –
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பழைய மாணவ மாணவிகள் சந்திப்பு நடைப்பெற்றது.
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அரசு பள்ளியில் 1981ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் ஆசிரியராக, காவல்துறையாக, கூட்டுறவு துறையாக, தபால் துறையாக உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி பெற்றோர் – ஆசிரியர் கழக தலைவர் நவநீதன் முன்னிலை வகித்தார். சென்னை புதுக்கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அப்துல்லத்தீப் அனைவரையும் வரவேற்றார். இப்பள்ளியில் 1979 முதல் 81 ஆண்டு வரை 11, 12-ம் வகுப்பில் கல்வி பயின்றவர்களுக்கு பாடம் நடத்திய 95 வயது நிரம்பிய தமிழாசிரியர் அம்பிகாபதிக்கு முன்னாள் மாணவர்கள் பொன்னாடை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து கல்வி பயின்ற காலங்களில் நடைபெற்ற சுவாரசியங்களை அவர்கள் நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்த அவர்கள் தங்கள் படித்த வகுப்பறைகளில் அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் தங்கள் குடும்பம், குழந்தைகள், வேலை பற்றி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் மனோகரன், சேகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
பேட்டி..
பழைய மாணவி..
பள்ளி ஆசிரியர்..
இளவரசி…




















