காஞ்சிபுரம், அக். 15 –
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வார்டு உறுப்பினர்களை கொண்ட காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பா.ஜ.க சார்பில் 11 வார்டு பதவிக்கு போட்டியிட்ட வ.நாகலிங்கம் என்ற பா.ஜ.க வேட்பாளர் வெற்றிப் பெற்றுவுள்ளார்.
இந்த வார்டுக்கு மொத்தம் 7 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் பாஜக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்த சிலம்பரசு ( மாற்று ) , அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த பார்த்திபன்( மாற்று ) , திமுக சார்பில் ராமச்சந்திரன் ( மாற்று ) ஆகியோர் வேட்பு மனுவை திரும்ப பெற்ற நிலையில்,
கடைசியாக களத்தில் திமுகவைச் சேர்ந்த தசரதன் பா.ஜ.க வைச் சார்ந்த நாகலிங்கம், நாம் தமிழர் கட்சியை சார்ந்த செந்தில் முருகன், பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த பிரபுகுமார், ஆகிய 4 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இதில் பா.ஜ.க வைச் சேர்ந்த நாகலிங்கம் 11 வார்டில் இருந்து காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்வாகிவுள்ளார். இது திமுக வை நிறுவிய பேரறிஞர் அண்ணா பிறந்த பூமி என்பது குறிப்பிடத் தக்கது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 23 வார்டுகளை கொண்ட அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் பா.ஜ.க வை சேர்ந்த பி.கோமதி என்ற பெண் வேட்பாளர் 11 வாரடில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுளார்.
அதைப் போன்று திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் 7 வார்டில் இருந்து பூ.லட்சுமி என்பவரும், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் 11 வார்டில் இருந்து ப.ரேவதி என்பவரும், மதுராந்தகம் ஒன்றியம் 17 வது வார்டில் இருந்து தி.ஜானகி என்பவரும் இம்மாவட்டத்தில் இருந்து 2 பா.ஜ.க பிரதிநிதிகள் தேர்வாகிவுள்ளனர்.
மேலும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் 15 வது வார்டில் இருந்து பா.ஜெயலெட்சுமி என்பவரும், மானூர் ஊராட்சி ஒன்றியம் 10 வது வார்டில் இருந்து க.பால்முருகன் என்பவரும், இராதாபுரம் ஒன்றியம் 10 வது வார்டில் இருந்து பா.அரிமுத்தரசு ஆகிய 3 பேர் இந்த மாவட்டத்தில் இருந்து தேர்வாகிவுள்ளனர்.
ஆக மொத்தம் 2021 ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடைப்பெற்ற அனைத்து மாவட்டங்களிலும் 1421 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு நடந்த தேர்தலில் 8 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளை கைப்பற்றிவுள்ளது பா.ஜ.க .