PIC FILE COPY :
சென்னை, அக். 3 –
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப் 13 அன்று தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேல்தல்களுக்கும் மற்ற ஏனைய 28 மாவட்டங்களுக்கு தற்செயல் தேர்தல்களின் தேதிகளை வெளியிட்டது.
அதன் படி ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் அக் 6 மற்றும் 9 தேதிகளில் இரு கட்டமாகவும், அதைப்போன்று தற்செயல் தேர்தலுக்கு அக. 9 ஆம் தேதி நடைப்பெறும் எனவும் அறிவித்து, அதற்கான தேர்தல் நடத்தை விதிகளையும் வெளியிட்டது.
அதன்படி பணமாக ரூ. 50, ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாதென்றும், அதைப்போல் தகுந்த ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் அதனை கைப்பற்றி தேர்தல் நடத்தை விதி மீறல் சட்டத்தின் படி நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த செப் 18-2021 முதல் செப் 28-2021 வரையில் 9 மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனைகளில் ஈடுப்பட்டதை தொடர்ந்து அவர்கள் நடத்திய பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் ரூ. 33, 90, 500 ரொக்கமும், சந்தனக் கட்டைகள் 16.40 கிலோவும், பரிசுப் பொருட்கள் 100 எண்ணிக்கையிலான மின விசிரிகள், 215 எண்ணிக்கையிலான புடவைகள், 1065 துண்டுகள், 250 பித்தளை விளக்குகள், 600 குங்கும சிமிழ்கள், மற்றும் 1009 மதுப்பான பாட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.
அதுப் போன்று தற்செயல் தேர்தல் நடைப்பெறும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ. 7,99,800 ரொக்கம் பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.