ஆவடி, செப் . 24 –

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி நகர் மெயின் ரோட்டில் சர்வே நம்பர் 482 ல் அடங்கிய கட்டிடங்களுக்கு அரசு அனுமதி பெறாமல் இருந்ததை தொடர்ந்து பல புகார்கள் வந்ததை தொடர்ந்தும் அதன் பேரில் பலமுறை எச்சரிக்கை விடுத்தப் பின்னும் எந்தவித முன்னெடுப்புகளை எடுக்காமல் தவிர்த்து வந்ததின் அடிப்படையில்  அக்கட்டிடத்திற்கு ஆவடி மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்து நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இப் பகுதியில் உள்ள சில கட்டிட கட்டுமானத்திற்கு எந்த வித அனுமதி பெறாமல் கட்டிட பணிகள் நடந்து வருவதாகவும், அதைப் போன்று பல கட்டிடங்கள் வேலைகள் முடித்த நிலையில் கட்டிடங்களில் விதி மீறல்கள் உள்ளதாகவும் அது குறித்து தொடர் புகார்கள் ஆவடி மாநகராட்சிக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து ஆணையர் சிவகுமார் உத்தரவின்படி நகரமைப்பு ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அரசு அனுமதி வழங்க படாத கட்டிடத்தினை கண்டறிந்து அக் கட்டிடத்திற்கு ஆவடி நகராட்சி விதியின் படி நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன் மற்றும் நகரமைப்பு ஆய்வாளர் தினகரன்  முன்னிலையில் அரசு அனுமதி பெறாத கட்டிடத்திற்கு பூட்டு போட்டு சீல்  வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அப் பகுதியில் பல்வேறு நில உரிமையாளர்கள் கவனத்திற்கு கட்டிட அனுமதி வாங்கிய பின் கட்டுமானப் பணிகளை தொடர  அறிவுறுத்தினார்கள் .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here