ஆவடி, செப் . 17 –
இன்று பாரத பிரதமர் மோடி அவர்களின் 71 வது பிறந்த நாளை நாடு முழுவதும் பா.ஜ.க கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இனிப்புகளை வழங்கியும், நலத்திட்ட உதவிகளை ஏழை எளியோர்களுக்கு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந் நிலையில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பிரதமர் மோடி அவர்களின் 71 வது பிறந்த தின விழா நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடைப்பெற்றது. ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட பிற மாநில தொடர்பு பிரிவு சார்பில் அதன் மாவட்டத் துணைத் தலைவர் N. சுஜாராம் அவர்களின் ஏற்பாட்டில் பாரதப் பிரதமர் மாண்புமிகு மோடி ஜி அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆவடி லயன் டாக்டர் எஸ்.கே.எஸ். மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். இவ் விழாவில் பா.ஜ.க. நிர்வாகிகளும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.
அதைப் போன்று அதே ஆவடிப் பகுதியில் ஆவடி நகர பா.ஜ.க தலைவர் நித்தியானந்தம் நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைப்பெற்ற இவ்விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளையும், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் அஸ்வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆவடி லயன் டாக்டர் எஸ். கே. எஸ். மூர்த்தி மற்றும் நகர பொதுச் செயலாளர் யூ. சந்தானம் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏரளானமான பொதுமக்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.