செங்கல்பட்டு அருகே 100- நாள் வேலை திட்டத்தில் சம்பளம் குறைவாக போட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு, செப். 9 –

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனூர் கிராமத்தில் கடந்த வாரம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100-நாள் வேலை பணி நடைபெற்றது.

இந்நிலையில் நாளொன்றுக்கு ஊதியமாக 200- ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. வாரத்திற்கு 6-நாட்கள் நடைபெறும் பணிக்கு 1200-ரூபாய் ஊதியமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்‌.

இந்நிலையில் கடந்த வாரம் 6-நாட்கள் செய்த வேலைக்கு 800-ரூபாய் மட்டுமே பணம் வங்கி கணக்கில் வந்துள்ளது. இது குறித்து மேற்பார்வையாளரிடம் கேட்டும் முறையான பதில் அளிக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் முள் வெட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் செங்கல்பட்டு – வள்ளிபுரம் சாலை முற்றிலுமாக முடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையடுத்து 2-மணி நேரமாக நடைபெற்று வந்த சாலைமறியல் போராட்டம் முடிவுக்கு வந்து கலைந்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here