சென்னை அருகே 13 கோடி மதிப்பிலான திமிங்கலம் கொழுப்பு பறி முதல் செய்யப் பட்டு, சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்ய முயன்ற. 9 பேர் கொண்ட கும்பலை வனச்சரக காவலர்கள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

செய்தி சேகரிப்பு இ.சி.ஆர் ப. வினோத் கண்ணன்

சென்னை, ஆக. 20 –

இந்தியாவில் தடை செய்யப்பட்ட திமிங்கலம் கொழுப்பான ஆம்பர் என்ற பொருளை விற்பனை செய்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணகிரி மற்றும் கடலூரை சேர்ந்த கும்பல் திருப்போரூரில் வனச்சரக காவலர்களால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக கடத்தி வந்துள்ள திமிங்கலத்தின் கொழுப்பை விற்பனை செய்வதற்காக 9 பேர் கொண்ட கும்பல் திருப்போரூர் பகுதியில் ஒன்று கூடி சந்திப்பதாக திருப்பூர் வனச்சரக காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

அத் தகவலின் அடிப்படையில் திருப்பூர் வனச்சரக அலுவலர் கல்யான், சென்னை வனச்சரக அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட வன காவலர்கள் மாறு வேடத்தில் சென்று முதலில் 3 பேர் கொண்ட கும்பலை வளைத்து பிடித்துள்ளனர். பிடிப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து ஒரு கும்பல் திமிங்கலம் வாங்க வருவதாக தெரியவந்தது.  அந்த கும்பலை பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து தங்களிடம் சிக்கிய ஒருவர் செல்போனில் இருந்துப் பேசி அவர்களை மேலக்கோட்டையூர் வரவைத்து மடக்கிப் பிடித்தனர்.

இந்த சம்பவத்தில் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மோகன்தாஸ் (34), கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த அருள்முருகன் (30), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த விக்னேஷ் (30), தாம்பரம் அடுத்த வெங்கபாக்கத்தை சேர்ந்த டேனியல் (53), ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஆதித்யா (43), சென்னை அரும்பாக்கத்தில் சேர்ந்த ராஜன் (51), நெற்குன்றத்தை சார்ந்த முருகன் (48), பூந்தமல்லி அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்த மோகன் (50), கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (50) ஆகிய 9 பேரை வனச்சரக போலீசார் கைது செய்தனர்.

கைதான அவர்களிடமிருந்து 13 கிலோ ஆம்பர், இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆம்பர் மதிப்பு 13 கோடி என வன அலுவலகர்கள் தெரிவித்தனர்.

கைபற்றப்பட்ட ஆம்பர் வாசனை திரவியங்கள், ஆபரணங்கள், ஆன்மை விருத்திக்கான மூலிகை மருந்து போன்றவற்றை தயாரிக்க பயன்படுவதாக தகவலைத் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here