கிருஷ்ணகிரி, ஆக 4 –
கிருஷ்ணகிரியில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டாடா எலக்ட்டரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஓலா எலக்ட்ரிக் இந்தியா நிறுவனம், டைடன் நிறுவனம், கேட்டர்பில்லர் இந்தியா நிறுவனம், பைவிலி டிரானஸ் போர்ட், ரெயில் டெக்னாலஜிஸ், மைலான் ஆய்வக நிறுவனம், செய்யாறு SEZ நிறுவனம், அசோக் லைலாண்ட் நிறுவனம், எக்சைடு நிறுவனம், உள்ளிட்ட 21 நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்தித்து, பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்காக நிதியுதவி அளித்தார்கள். இந் நிகழ்வின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.வி.ஜெயசந்திர பானு ரெட்டி ஐ.ஏ.எஸ் ஆகியோர் உள்ளனர்.