திருவள்ளூர் இராஜாஜிபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் மனைவி தனியார் வங்கி ஒன்றில் அவரது சேமிப்புக் கணக்கில் ரூ.3,75,510 சேர்த்து வைத்திருந்ததாகவும், அதில் இருந்து தனக்கு தெரியாமல் அடையாளம் தெரியாத நபர்களால் இணையவழி மூலமாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்திரவின் பேரில் தனிப்படை அமைக்கப் பட்டு இணையவழி திருடர்கள் மூன்று பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறைப்படுத்தினர்.
திருவள்ளூர்; அக்.2-
திருவள்ளூர் இராஜாஜிபுரத்தை சேர்ந்த லக்ஷ்மி வ 47 க/பெ சத்தீஷ்குமார் என்பவர் தான் தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்ததாகவும் அதிலிருந்து தனக்கு தெரியாமலே ரூபாய் 3,79,510 / பணம் அடையாளம் தெரியாத நபர்களால் இணையவழி மூலமாக எடுக்கப்பட்டு இருப்பதாக திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர காவல் நிலைய குற்ற எண் 456/2019 ச/பி 420 இதச மற்றும் 66 (சி), 66(டி), 66(இ) ஐவு யுஉவ இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது சம்மந்தமாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.அரவிந்தன் உத்திரவின் பேரில் மணவாளநகர் காவல் ஆய்வாளர் இராதாகிருஷ்ணன், நகர காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் பிரிவின் உதவியோடு வங்கி கணக்கிலிருந்து இணையவழி மூலமாக மோசடியாக பணத்தை எடுத்த நபர்களை கண்டுபிடிக்க உத்திரவிடப்பட்டு. தனிப்படையின் தீவிர முயற்சியால் கள்ளத்தனமாக பணம் பறிமாற்றம் செய்யப்பட்டிருந்த நபர்களின் வங்கி கணக்கு அவர்களின் தொலை பேசி எண் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் பெங்களூருவில் இருப்பதாக தெரிவந்துள்ளது. அவர்களை கைது செய்ய தனிப்படையினர் பெங்களூர் விரைந்து சென்று குற்ற செயலில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த லாலோம்கிமி (எ) எஸ்தர் வ/30 த/பெ லாஸ்வான், 2. பிரமேஷ்குருங் வ/28 த/பெ சஞ்சன்குருங், 3. கௌதம் கிம்ரே த/பெ பிதீப்கிம்ரே ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுத்தினர்.