இராமநாதபுரம் மாவட்டத்தில் *09.09.2019 (நாளை) முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 09.09.2019 முதல் 15.09.2019 வரையிலான நாட்களிலும் 25.10.2019 முதல் 31.10.2019 வரையிலான நாட்களில் பிற மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய தடையும் விதித்துள்ளார். பரமக்குடியில் வரும் செப் 11 தியாகி இமானுவேல் சேகரன் குரு பூஜையும், அக்.30 கமுதி பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கம் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை நடைப்பெறுவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் இராமநாதபுர மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை, பிற மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள் நுழையத்தடை...