ராமநாதபுரம், ஜூலை 5–
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேமுள்ளுவாடி இலுங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் 48ம் நாள் மண்டல பூஜை ஜாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களால் வெகு சிறப்பாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை அருகே முள்ளுவாடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பல தரப்பட்ட சமுதாயத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் ஜாதி மத பேதமின்றி பழகி ஒவ்வொரு விழாவையும் வெகு சிறப்பாக நடத்துவதை பல தலைமுறைகளாக கடைபிடித்து வருகின்றனர்.
முள்ளுவாடி கிராமத்தில் அனைத்து சமுதாயத்தினராலும் கும்பிடப்படும் இலங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கோயில் திருப்பணிகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48ம் நாள் மண்டலபூஜை முள்ளுவாடி கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமத்தினரையும் அழைத்து விக்னேஸ்வர பூஜை, ஈண்யாகடாஜனம், பஞ்சகவ்யபூஜை, வேதிகா பூஜை, மல மந்திர காயத்ரி மந்திர ஹோமம் மகா பூர்ணாஹூதீ மற்றும் தீபாராதணை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இலங்கை ஸ்ரீ மகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இக்கோயிலின் சிறப்பு அனைத்து சமுதாயத்தினரும் ஒன்று சேர்ந்து விழா நடத்தி சாமி தரிசனம் செய்வது. விழாவில் பங்கேற்ற பக்தர்களக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா கமிட்டியினர் ஞானபிரகாஷ், விஸ்வநாதன், சபரி மற்றும் அனைத்து சமுதாய பிரமுகர்கள் செய்திரு்தனர்.