போரூர்:

ஆலப்பாக்கம் பாலமுருகன் நகர் சித்திரை தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 25-ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் மாலை திரும்பி வந்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. படுக்கை அறையில் உள்ள ஏ.சி. கிரில்லை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருந்தனர்.

இதுகுறித்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

சிறுவர்கள் 3 பேர் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக மதுரவாயல் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here