மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே உள்ள தேவாரம் டி.கே.வி. பள்ளி தெருவை சேர்ந்தவர்கள் ஜெயராமன்(65), தங்கராஜ் (53), பாபு (39). இவர்களுக்கு தேவாரம் வட்ட ஓடை புலத்தில் புஞ்சை நிலம் இருந்துள்ளது.

அந்த நிலத்தை தேவாரம் பகுதியை சேர்ந்த ராஜா (37), இவரது தந்தை ஈஸ்வரன் (60), இதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் (62), ராஜகோபால் (70), கனகராஜ் (54), ராகவன் (60), பாஸ்கரன் (60), தங்கம் (60), மாணிக்கம் (60) ஆகியோர் சேர்ந்து பத்திர எழுத்தர் முருகன் (50) என்பவர் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து கடந்த 2011-ம் ஆண்டு ராஜாவின் பெயரில் பத்திரம் பதிவு செய்து சொத்துக்களை அபகரித்துள்ளனர்.

இதுகுறித்து ஜெயராமன் தரப்பினர் தேவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் தேவாரம் போலீசார் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில் இந்த வழக்கில் தொடர்புடைய மாணிக்கம் இறந்து விட்டார். மீதியுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி மணிவாசகன் தனது தீர்ப்பில், போலியான ஆட்கள், ஆவணங்கள் மூலம் சொத்தை அபகரிக்க முயன்ற ராஜாவுக்கு நான்கு பிரிவுகளின் கீழ் தலா இரண்டு ஆண்டுகள் வீதம் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஈஸ்வரன், கனகராஜ் ஆகியோருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வீதம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், ஜெயராமன், ராஜகோபால், ராகவன், பாஸ்கரன், முருகன், தங்கம் ஆகியோருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் தலா 4 ஆண்டுகள் மற்றும் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here