காஞ்சிபுரம், ஆக. 05 –

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கட்பட்ட பகுதிகளில் எதிர்வரயிருக்கும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் பிரம்மாண்டமான சுவர் விளம்பரங்களை வரைந்து மிகச்சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.

தேமுதிக கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் 70-ஆவது பிறந்தநாள் விழா எதிர் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வர உள்ளது. அதனை முன்னிட்டு அவ்விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரனனின் அறிவுறுத்தலின்படி உத்திரமேரூர் ஒன்றிய தேமுதிக செயலாளர் அழிசூர் வி. கன்னியப்பன், உத்திரமேரூர் பேரூர் தேமுதிக  செயலாளர் எஸ். ஐயப்பன் தலைமையில் உத்திரமேரூர் ஒன்றித்திற்குட்பட்ட கட்டியாம்பந்தல்  பகுதி மற்றும் உத்திரமேரூர் தொகுதிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேமுதிக தலைவர் கேப்டன் பிறந்தநாள் விழா சுவர் ஓவியங்கள் பிரம்மாண்டமாக வரையப்பட்டுள்ளது.

தேமுதிக நிர்வாகிகள்   உத்திரமேரூர் ஒன்றிய அவை தலைவர்  டி. இளையபெருமாள், உத்திரமேரூர் ஒன்றிய பொருளாளர் எம். சந்திரசேகர், உத்திரமேரூர் பேரூர் கழக அவைத்தலைவர் வி.ஆர். ஆறுமுகம்,  உத்திரமேரூர் பேரூர் கழக பொருளாளர் வி. சீனிவாசன், மாவட்ட மகளிரணி  செயலாளர் செல்வி பரசுராமன் மற்றும்  கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சுவரோவியங்களை வரைந்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here