முகப்பேர், மார்ச். 26 –

திருவள்ளூர் மாவட்டம் சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் முகப்பேரு இஸ்லாமிய நூலகம் இக்ரா சமூக அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

முகாமில் கண்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர் .இதில்   174 பேர் கலந்து கொண்டனர். அதில் 90 நபர்கள்  அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர் . அவர்களுக்கு சங்கர நேத்ராலயா வின் சொந்த பேருந்தில் அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

இம்முகாமில் இஸ்லாமிய நூலகர் நஸ்ருல்லாவஹ். இக்ரா வெல்பேஃர் மையம் எம்.பவீ மற்றும் சங்கர நேஜ்ராலயா தலைமை சமூக சேவகர் சந்திரகுமாார் . உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது இக்ரா வெல்பேஃர் மையத்தின் 65 வது முகாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் திரளான பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here