காஞ்சிபுரம், செப். 23 –

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் மத்திய மாநில அரசுகள் 2வது விமான நிலையம் அமைக்க திட்டமிட்டு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதகளின் வசிக்கும் கிராம மக்கள் நேற்றுடன் பல்வேறு போராட்டங்களின் வாயிலாக தங்கள் எதிர்ப்பினை 58 வது நாளாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை ஒருநாள் பள்ளிக்கு அனுப்பாமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் புதிய வகை  போராட்டத்தில் ஈடுப்படு வருகின்றனர்.

அம்மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து பொதுமக்களை நேரில் சந்தித்து வருகின்றனர். இருப்பினும் இவர்கள் எடுத்துள்ள இப்போராட்டம் அப்பகுதியில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மேலும், தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை நேற்று திடீரென அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை விற்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

தங்களின் சொந்த விளை நிலங்களை விற்பதற்கு  தங்களுக்கு உரிமை உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்று வாங்கிட வேண்டும் எனக் கூறுவது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் இதனை கைவிட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கற்றவருக்கச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர். செல்வங்களில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம் ஆகும். இத்தகைய உயர்ந்த செல்வத்தை அடைந்து கொள்ள எந்த செல்வங்களையும் இழக்கலாம். ஆனால் கல்விச் செல்வத்தினை எக்காரணத்திற்காகவும் இழக்கக் கூடாது என்று பல அறிஞர்கள் கூறியிருக்கும் நிலையிலும்,

மேலும் மாதிரி காலாண்டு தேர்வுகள் நடைபெற்றிருக்கும் தருணத்தில்  அந்த கல்வியையே இன்று ஒருநாள் ஏகனாபுரம்  நெல்வாய்  மேலேரி நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள அரசு பள்ளிகளுக்கு தங்களது மகன் மற்றும் மகள்களை இன்று ஒருநாள்  பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்  என  முடிவெடுத்து இன்று ஒருநாள் பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது. விமான நிலைய எதிர்ப்பு இயக்கம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here