புதுச்சேரி, ஏப். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

முன்விரோதம் காரணமாக சிறையில் இருந்து பினையில் வந்த ரவுடியை கொலை செய்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை புதுச்சேரி போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ருத்ரேஷ் (28). இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. ரவுடியான இவர் மீது அடிதடி கஞ்சா விற்பனை உள்ளிட்ட 6 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பால்குட ஊர்வலம்  நடைபெற்ற போது, ருத்ரேஷின் தாய் மற்றும் சகோதரி கண் முன்னரே 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஒடிவிட்டனர்.

அதுத்தொடர்பாக உருளையான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவ் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வர் @ மோகன் ஈஸ்வர் தனது நண்பர்கள் மற்றும் தம்பிகளுடன் ருத்ரேஷை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வில்லியனூர் பகுதியில் தலைமறைவாக இருந்த  ஈஸ்வர் (எ) மோகன் ஈஸ்வர், கௌதம் மற்றும் சின்ன அரவிந்த் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அதே பகுதியில் ருத்ரேஷ் வாகனத்தில் வேகமாக சென்ற போது அதனை ஈஸ்வர் மற்றும் அவரது சகோதரர்கள் தட்டி கேட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்த ருத்ரேஷ் ஈஸ்வர் தனியாக இருந்த போது கத்தியால் அவரது கையில் வெட்டியாதகவும் அவர் வாக்கு மூலம் அளித்து உள்ளதாக தெரிய வருகிறது.

அதில் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், ருத்ரேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துவுள்ளனர். இதனிடையே கடந்த 15 ஆம் தேதி பிணையில் வந்த ருத்ரேஷை கொலை செய்ய ஈஸ்வர் மற்றும் அவரது சகோதரர்களான எழில் மற்றும் பாலு திட்டம் தீட்டி அவர்களது நண்பர்களான பரத், கெளதம், சின்ன அரவிந்த் ஆகியோருடன் உடன் சேர்ந்து ருத்ரேஷை கொலை செய்தது மேலும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய 3 கத்திகள், 2 செல்போஃன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கைது செய்ப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் போலீசாரை கண்டு தப்பி ஒடி தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here